கோபாலப்பட்டிணத்தில் சுட்டெரிக்கும் கோடை வெயில்



 






கோபாலப்பட்டிணத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரிப்பதால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். 
 
தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் அடுத்த 2 நாட்களுக்கு இயல்பை விட மேலும் அதிகரிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் உக்கிரமடைந்துள்ள நிலையில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் நாளை மறுநாள் (புதன்கிழமை) தொடங்குகிறது. இந்த அக்னி நட்சத்திரம் வருகிற 28ந்தேதி வரை நீடிக்கும். குறிப்பாக 24ந்தேதி வரை அனல் கக்கும்.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அக்னி வெயில் தொடங்குவதற்கு முன்பே வெயில் வாட்டி வதைக்க தொடங்கி விட்டது. இதனால் பொதுமக்கள்  வெளியில் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். பகலில் வாட்டி வதைக்கும் வெயிலின் தாக்கம் மாலை வரை நீடிக்கிறது. 

இதனால் மின்விசிறி இல்லாமல் வீட்டில் தூங்க முடியாது என்ற நிலை உருவாகி உள்ளது. கத்திரி வெயில் என அழைக்கப்படும் அக்கினி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. கடந்த ஒரு மாதமாக வெயில் கொளுத்தி வருகிறது. அவ்வேப்போது கோடை மழை பெய்து ஆறுதலும் தருகிறது..

வெயிலின் உக்கிரத்தில் தப்பிக்க, தங்களை பாதுகாத்து கொள்ள குளிர்ச்சி தரக்கூடிய உணவுகளை பொதுமக்கள் சாப்பிட தொடங்கி உள்ளனர்.

இந்த அக்னி வெய்யிலின் தாகத்தை குறைக்க பொதுமக்கள் தண்ணிர், மோர், தர்பூசணிப் பழம், போன்ற உடலுக்கு குளிர்ச்சியான ஆகாரங்களை அதிமாக சேர்த்துக் கொண்டால் உடல் வெப்பத்தை தாங்கிக் கொள்ளும் எதிப்பு சக்தி இருக்கும் என மருத்துவர்கள் ஆலோசனை கூறுகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments