மணமேல்குடி தொழில் அதிபர் கொலை வழக்கில் விசாரணை அதிகாரி இடமாற்றம்

மணமேல்குடி தொழில் அதிபர் கொலை வழக்கில் விசாரணை அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

புதுக்கோட்டை தொழில் அதிபர் கொலை புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே ஆவுடையார்பட்டினத்தை சேர்ந்தவர் முகமது நிஜாம் (வயது 53). தொழில் அதிபரான இவர் கடந்த ஏப்ரல் மாதம் 24-ந் தேதி இரவு வீட்டின் முன்பு அமர்ந்து செல்போனை பார்த்துகொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டின் பின்புறமாக வந்த மர்ம ஆசாமிகள் முகமது நிஜாமை கழுத்தை அறுத்து படுகொலை செய்தனர். மேலும் அவரது வீட்டினுள் சென்று மனைவி ஆயிஷா பீவியை கத்தியை காட்டி மிரட்டி கட்டிப்போட்டு பெட்டகத்தில் வைத்திருந்த 170 பவுன் நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து மணமேல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 8 பேர் கைது இந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தொடர்புடையவர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் உத்தரவின் பேரில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. 

இதில் விசாரணை அதிகாரியாக மணமேல்குடி இன்ஸ்பெக்டர் சாமுவேல் ஞானம் நியமிக்கப்பட்டார். இதையடுத்து, தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி இந்த வழக்கில் தொடர்புடைய 8 பேரை கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். 
 
இவர்களிடமிருந்து 62 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மீதியுள்ள நகைகள் கேரளாவில் விற்கப்பட்டதாக தெரிகிறது. அந்த நகைகளை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ஜோஸ்மில்டன் வெளிநாடு தப்பி சென்றார். அவரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். விசாரணை அதிகாரி இடமாற்றம் இந்தநிலையில் தொழில் அதிபர் கொலை வழக்கில் விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் சாமுவேல் ஞானம் அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் போலீஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

மணமேல்குடி போலீஸ் நிலையத்திற்கு புதிய இன்ஸ்பெக்டராக கீரமங்கலம் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்த பாஸ்கரன் நியமிக்கப்பட்டு உள்ளார். மணமேல்குடி தொழில் அதிபர் கொலை, கொள்ளை வழக்கு தற்போது சூடுபிடித்துள்ள நிலையில் விசாரணை அதிகாரி திடீரென மாற்றப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments