மீமிசல் அருகே குமரப்பன்வயலில் மின் விளக்கு அமைத்து தர வேண்டி கோரிக்கை
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா வெட்டிவயல் ஊராட்சிக்கு உட்பட்ட மீமிசல் அருகே உள்ள கிராமம் குமரப்பன்வயல். குமரப்பன்வயல் பேருந்து நிறுத்தத்தில் மின் விளக்கு எறியதனால் இப்பகுதி இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இப்பதியில் இரவு நேரத்தில் செல்லும் சிறியவர்கள், பெண்கள், முதியவர்கள் என அனைத்து மக்களும் நடந்து செல்ல பெரிதும் அச்சப்படுகின்றனர். 

மேலும் இப்பகுதியில் முட்புதர்கள் உள்ளதால் விச ஜந்துக்கள் அதிகம் காணப்படுகிறது இதனால் இவ்வழியாக நடந்து செல்லும் பாதசாரிகள் அச்சப்படுகின்றனர்.

மேலும் இரவு நேரத்தில் இப்பகுதியில் சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பத்தப்பட்ட ஊராட்சி நிர்வாகமும் அரசு அதிகாரிகள் கல ஆய்வு மேற்கொண்டு விரைந்து இப்பகுதியில் உயர் கோபுர மெர்குரிவிளக்கு அமைத்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments