கோட்டைப்பட்டினம்: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விசைப்படகுகளை மீன்பிடி தடை காலத்தில் மீன்வளத் துறையினர் ஆய்வு செய்வார்கள். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக ஆய்வு மேற்கொள்ளவில்லை.
இதையடுத்து தற்போது கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியிலுள்ள விசைப்படகுகளை மீன்வளத்துறை துணை இயக்குனர் (விரிவாக்கம்) ரவிச்சந்திரன், தேனி மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனர் பஞ்ச ராஜா, புதுக்கோட்டை மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனர் சின்ன குப்பன், மீன்வளத்துறை ஆய்வாளர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து மீன்வளத்துறை உதவி இயக்குனர் சின்ன குப்பன் கூறுகையில், ஆண்டுக்கு ஆண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆய்வின்போது விசைப்படகுகள் எவ்வித பழுதும் இன்றி மீன்பிடிக்க தகுதியாக உள்ளதா மற்றும் விசைப்படகுக்கு உரிமம் உள்ளதா உள்ளிட்டவைகளை ஆராய்ந்து வருகிறோம். விசைப்படகுகளுக்கு உரிமம் இல்லாவிட்டால் உடனே அலுவலகத்தில் நேராக வந்து தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து உரிமத்தை பெற்றுக்கொள்ளலாம். இந்த ஆய்வின் போது விசைப்படகுகளுக்கு அனைத்து ஆவணங்களும் சரியாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு அரசு வழங்கும் மானியம் டீசல் மற்றும் சலுகைகள் தொடர்ந்து வழங்கப்படும். சில நபர்கள் படகு இல்லாமல் உரிமம் மட்டும் வைத்துக்கொண்டு அரசு சலுகைகளை பெற்று வருகின்றனர். அவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.