எர்ணாகுளம் - வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் ரயில் முத்துப்பேட்டையில் நின்று செல்லாவிட்டால் போராட்டம் உபயோகிப்பாளர் சங்கம் அறிவிப்பு


திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் உள்ள ரயில் நிலையம் ஆங்கிலே யர் ஆட்சியில் அமைக்கப்பட்டது. 

திருவாரூரில் இருந்து முத்துப்பேட்டை வழியாக காரைக்குடி  வரையிலான மீட்டர் கேஜ் ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றுவதற்காக 2009ம் ஆண்டு இப்பகுதியில் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இந்த வழிதடத்தில் ஜூன் 4ம் தேதி முதல் எர்ணாகுளம் - வேளாங் கண்ணி எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை துவங்குகிறது. எர்ணாகுளத்திலிருந்து புறப்படும் ரயில் 5ம் தேதி முத்துப்பேட்டை ரயில் நிலையத்தை கடந்து வேளாங்கண்ணி செல்கிறது. இந்த ரயில் நின்று ரயில் நிலையங்களின் அட்டவணையில் முத் துப்பேட்டை ரயில் நிலையத்தின் பெயர் இல்லை. 

இதனால் முத்துப்பேட்டை ரயில் நிலையத்தில் எர்ணா குளம்- வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தி செல்ல வலியுறுத்தி ஒன்றிய அரசு,ரயில்வேத்துறை அமைச்சர், அதிகாரிகளுக்கு முத்துப்பேட்டை ரயில் உபயோகிப்பாளர் சங்கத்தினர் கோரிக்கை மனு அனுப்பினர்.

இது குறித்து ரயில் உபயோகிப்பாளர் சங்க தலைவர் எஸ்.எஸ்.பாக்கர் அலி சாஹீப் கூறுகையில், 

முத்துப்பேட்டையை புறக்கணிக்கும் வகையில் ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது. எர்ணாகுளம் வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்துமிடம் அட்டவணையில் முத்துப்பேட்டை ரயில் நிலையம் இல்லை.

இதுகுறித்து அதிகா ரிகளுக்கு கோரிக்கை மனுக்களை அனுப்பியுள்ளோம். இதற்கு ஒரு தீர்வு ஏற்பட்டு முத்துப்பேட்டை ரயில் நிலையத்தில் இந்த ரயில் நிற்காதபட்சத்தில் விரைவில் ரயில் மறியல் போராட்டம் நடத்துவோம் என்றார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments