ஆதார் எண் பயன்பாடு குறித்து முக்கிய உத்தரவு பிறப்பித்து திரும்பப் பெற்ற மத்திய அரசு






Aadhar card - ஆதார் எண் நகலை யாரிடமும் பகிர வேண்டாம் என அறிக்கை வெளியிட்ட மத்திய அரசு உடனடியாக அதை திரும்பப்பெற்றது.

பாதுகாப்பு கருதி ஆதார் அட்டை நகலை பகிர வேண்டாம் என மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அறிக்கை வெளியிட்டு அதை உடனடியாக திரும்பப் பெற்றது பேசுபொருளாக மாறியுள்ளது. இந்தியா குடிமக்களின் முக்கிய ஆவணமாக உள்ள ஆதார் எண் பயன்பாடு குறித்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அதில், உங்கள் ஆதார் கார்டின் நகலை யாரிடமும் பகிர வேண்டாம். பகிரப்படும் நகலை தவறாகப் பயன்படுத்தப்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, தேவைப்படும் இடங்களில் உங்கள் ஆதார் எண்ணின் கடைசி நான்கு இலக்கங்களை காட்டும் புதிய வெர்ஷனை பயன்படுத்தவும்.

இதை, ஆதாரின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://myaadhaar.uidai.gov.in இல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அத்துடன் இன்டெர்நெட் மையங்களில் இ-ஆதார் பதிவிறக்கம் செய்யும் போது பொது கணிணிகளை தவிர்க்கவும். அவ்வாறு பதிவிறக்கம் செய்தால், பதிவிறக்கம் செய்த பின் அனைத்து தகவல்களையும் நிரந்தரமாக டெலிட் செய்யவும். உரிமம் பெறாத தனியார் நிறுவனங்கள் உங்கள் ஆதார் அட்டையின் நகலை சேகரிக்கவோ, வைத்திருக்கவோ அனுமதியில்லை. அவ்வாறு செய்தால் அது ஆதார் சட்டம் 2016இன் கீழ் குற்றமாகும். ஒரு தனியார் நிறுவனம் தனி நபரின் ஆதார் கார்டை ஆவணமாக கேட்டாலோ அல்லது நகலை பெற விரும்பினாலோ அந்நிறுவனம் UIDAI இடம் உரிமம் பெற்றுள்ளதா என சரி பார்க்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை வெளியான சில மணி நேரத்திலேயே இணையத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியது. கடந்த சில ஆண்டுகளாகவே நாட்டின் அனைத்து குடிமக்களும் ஆதாரை அடிப்படை ஆவணமாக வைத்து பல இடங்களிலும் சேவைகளையும் பயன்களையும் பெற்று வருகின்றனர். ஒவ்வொரு தனிநபரும் ஆதார் அட்டையை ஆவணமாக காட்ட நூற்றுக்கணக்கான நகலை இதுவரை எடுத்து பயன்படுத்தியுள்ளனர்

தற்போது மத்திய அமைச்சகம் பாதுகாப்பை காரணம் காட்டி இந்த கருத்தை வெளியிட்டது எப்படி முறையாகும் என கேள்விகள் எழுந்தன. இந்த சர்ச்சை கிளம்பிய வேகத்திலேயே சம்பந்தப்பட்ட அறிக்கையை திரும்பப் பெறுவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆதார் அமைப்பு முற்றிலும் பாதுகாப்பானது தான் எனவும், மேற்கண்ட அறிக்கை தேவையில்லாத குழப்பத்தை விளைவிக்க கூடும் என்பதால் அதை உடனடியாக திரும்பப் பெறுகிறோம் என அமைச்சகம் கூறியுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments