தொண்டி - மதுரை சாலையில் உள்ள பள்ளங்களை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை






தொண்டி - மதுரை சாலையில் உள்ள பள்ளங்களை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியிலிருந்து மதுரை வரை தேசிய நெடுஞ்சாலை சுமார் 3 வருடத்திற்கு முன்பு போடப்பட்ட சாலை ஆகும். இந்த தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு ஒரு வருடத்திலேயே பழையனகோட்டை அருகே சாலையின் நடுவில் பள்ளம் ஏற்பட்டுவிட்டது. இதுவரை சரி செய்யப்படவில்லை. 

இந்த பள்ளத்தால் இரவில் வரும் 2 மற்றும் 4 சக்கர வாகன ஓட்டிகள் விபத்திற்குள்ளான சம்பவமும் ஏற்பட்டுள்ளது. கடந்த ஒன்னரை ஆண்டுக்கு முன்பு இதே பள்ளத்தில திருவெற்றியூரைச் சேர்ந்தவர் விழுந்து விபத்திற்குள்ளான நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். அதன்பிறகும் தேசிய நெடுஞ்சாலை துறை அலுவலர்களின் மெத்தனப்போக்கால் இதுவரை நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

மேலும் சாலையின் இருபுறங்களிலும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு அதை சரி செய்வதற்காக அடிக்கடி தோண்டிய பள்ளங்கள் சாலைகளின் ஓரங்களில் சரி செய்யப்படாமல் இச்சாலை தரமற்ற நிலையில் உள்ளது. இதேபோல் சுமார் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை பழுதாகி உள்ளது. 

அந்த பள்ளத்தில் கடந்த மாதம் ஆட்டோ மீது எதிரே வந்த கார் மோதிய விபத்தில் ஆட்டோ ஓட்டி வந்த டி. கிளியூரைச் சேர்ந்த கோவிந்தன் மகன் சித்திரவேலு சம்பவ இடத்திலேயே பலியானார். இப்படி தொடர்ந்து விபத்துக்களை ஏற்படுத்தும் பள்ளங்களை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments