பிளஸ்2 வேதியியல் பாடத்துக்கு போனஸ் மதிப்பெண்! அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு!
சென்னை:  பிளஸ்2 (12ஆம் வகுப்பு) வேதியியல் பாடத்துக்கு போனஸ் மதிப்பெண் வழங்கப்படும் அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் பிளஸ்2 பொதுத்தேர்வு கடந்த (மே மாதம்)  5ந்தேதி முதல் தொடங்கி 28ந்தேதி முடிவடைந்தது. இந்த தேர்வின்போது, வேதியியல் பாடத்திற்கான தேர்வு வினாத்தாளில்,  இரு வினா எண்கள் தவறாக இருந்ததாக  மாணாக்கர்கள் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து ஆய்வு செய்யப்படும் என தேர்வுத்துறை அறிவித்திருந்தது.

இந்த நிலையில், 2 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வில் வேதியியல் வினாத்தாளில் இடம்பெற்ற இரு கேள்விகளுக்கு போனஸ் மதிப்பெண் வழங்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.

அதன்படி, பகுதி 1-அ,வினா எண் 9 அல்லது பகுதி 1-ஆ,வினா எண் 5-க்கு விடையளித்திருந்தால் முழு மதிப்பெண்கள் வழங்கப்படும் எனவும், அதைப்போல,பகுதி -2,வினா எண் 29-க்கு மாணவர்கள் விடையளித்திருந்தால் முழுமதிப்பெண் வழங்கப்படும் எனவும் என அரசுத் தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில், ஏற்கனவே 12,10 ஆம் வகுப்பு தேர்வுகள் நிறைவடைந்த நிலையில் 11 ஆம் வகுப்பு தேர்வுகள் இன்றுடன் நிறைவடைகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments