சம்பைப்பட்டினத்தில் அன்னை ஆயிஷா மகளிர் அரபிக் கல்லூரி முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா

தஞ்சை மாவட்டம் பேராவூரணி வட்டம் சம்பைப்பட்டினத்தில் அன்னை ஆயிஷா மகளிர் அரபிக் கல்லூரி மற்றும் அல் இஜ்மா மழலையர் பள்ளி அமைந்துள்ளது.

அன்னை ஆயிஷா மகளிர் அரபிக் கல்லூரியின் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா மற்றும் அல் இஜ்மா மற்றும் அன்னை ஆய்ஷா ஆறாம் ஆண்டு துவக்க விழா மவ்லாவி அல்ஹாஜ் S.M. முகம்மது இஸ்மாயில் மிஸ்பாஹி அவர்களின் தலைமையில், அல்ஹாஜ் - டத்தோ ஸ்ரீரி முகம்மது ஹுசைன் பின் அப்துல் கரீம் மற்றும் சம்பைப்பட்டினம் ஜமாஅத்தார்கள் , பேரை வட்டார உலமா பெருமக்கள் முன்னிலையில், எதிர்வரும் 4-6-2022 சனிக்கிழமை அன்று காலை 9-00 மணி முதல் மதியம் 1-30 மணி வரை அல் இஜ்மா பள்ளி வளாகத்தில் நடைபெறுகின்றது.

பட்டம் வழங்கி ஆசியுரை வழங்குகிறார்கள் மவ்லவி அல்ஹாஜ் சதக்கத்துல்லா உலவி முதல்வர் அல் பத்ரிய்யா அரபிக்கல்லூரி , சுறம்பக்குடி. தலைவர், புதுகை மாவட்ட ஜமாஅத்துல் உலமாபை. மற்றும் கிராஅத் மவ்லவி முஹம்மது முபாரக் உஸ்மானி இதில் சம்பைப்பட்டினம், கீரமங்கலம், செந்தலைவயல், சேதுபாவாசத்திரம், ராவுத்தான்வயல் போன்ற ஊர்களை சார்ந்த பெண்மணிகள் பட்டம் பெறவிருக்கின்றனர்.

எனவே சிறப்பான இவ்விழாவிற்கு தாங்கள் அனைவரும் வருகைதந்து விழாவை சிறப்பித்து பட்டம் பெறும் ஆலிமாக்களின் நல்வாழ்விற்கும் , கல்லூரியின் வளர்ச்சிக்கும் துஆ செய்யுமாறு அழைப்பு விடுத்திருக்கின்றது அன்னை ஆயிஷா டிரஸ்ட் , அல் இஜ்மா மழலையர் பள்ளி , அன்னை ஆயிஷா பெண்கள் மத்ரஸா , சம்பைப்பட்டினம் .

குறிப்பு:
அல் இஜ்மா மழலையர் பள்ளி , அன்னை ஆயிஷா பெண்கள் மத்ரஸா மாணவர் சேர்க்கைக்கான அட்மிசன் நடைபெறுகிறது ...  மேலும் தொடர்புக்கு 
93440 93007 , 84898 60771

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments