புதுக்கோட்டை: ரூ.8 லட்சத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த போலீசார்


ரூ.8 லட்சத்தை மீட்டு உரியவரிடம்போலீசார் ஒப்படைத்தனர். 
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள மாவூர் கிராமத்தை சேர்ந்தவர் பெரியகருப்பன் (வயது 45). இவர் நேற்று முன்தினம் புதுக்கோட்டையில் இருந்து திருச்சி- காரைக்குடி பைபாஸ் சாலையில் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். கருப்பர் கோவில் அருகே சென்றபோது முன்னே சென்ற சைக்கிள் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் 2 பேரும் படுகாயமடைந்தனர். 

இந்தநிலையில் பெரியகருப்பனை அக்கம்பக்கத்தினர் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மதுரையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

இதனிடையே பெரியகருப்பன் மோட்டார் சைக்கிளில் இருந்த ரூ.8 லட்சத்து 27 ஆயிரத்தை அருகில் இருந்தவர்கள் எடுத்து நமணசமுத்திரம் போலீசிடம் ஒப்படைத்தனர். பின்னர் பெரியகருப்பன் மனைவி ராமச்சந்திராவை போலீசார் வரவழைத்து பணத்தை அவரிடம் ஒப்படைத்தனர். மேலும் விபத்து குறித்து நமணசமுத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments