எர்ணாகுளம் - வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் இரயில் முத்துப்பேட்டையில் நின்று செல்ல கோரி ரயில் மறியல் போராட்டம்!
முத்துப்பேட்டை இரயில் உபயோகிப்பாளர்கள் சங்கம் நடத்தும் இரயில் மறியல் போராட்டம் அறிவிப்பு 

முத்துப்பேட்டை அனைத்து தகுதியும் நிறைந்த ஒரு தாலுக்காவாகும். இங்கே உலகப் புகழ்பெற்ற தர்ஹா உள்பட மும்மதங்களின் புனித ஸ்தலங்களும், உயர்கல்வி நிறுவனங்களும், வர்த்தக நிறுவனங்களும், மீன், தேங்காய் போன்ற ஏற்றுமதி நிறுவனங்களும் சுமார் இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்ற இந்த ஊரை தென்னக இரயில்வே திட்டமிட்டு புறக்கணிக்கின்றது. மேலும் இந்த ஊர் வளர்ச்சி அடைந்துவிடக்கூடாது என்பதில் தென்னக இரயில்வே கவனமாக உள்ளது. 

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் இரயில் முத்துப்பேட்டையில் நின்று செல்ல இரயில்வே கோட்ட மேலாளர்கள் திருச்சி மற்றும் திருவனந்தபுரம் ஆகியோர்களுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்தும் வண்டியை நிறுத்த மறுக்கிறார்கள். ஒரு நாள் ஒன்றுக்கு முத்துப்பேட்டை தர்ஹாவிற்கு இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட கர்நாடகா கேரளா பக்தர்கள் (யாத்ரீகர்கள்) வந்து செல்கிறார்கள் எதையும் கவனத்தில் கொள்ளாமல் முத்துப்பேட்டையை புறந்தள்ளுவதால் எதிர்வரும் 20-06-2022 திங்கட்கிழமை மாலை 5.00 மணிக்கு முத்துப்பேட்டை இரயில் நிலையத்தில் இரயில் மறியல் நடைபெறும். நமது ஊரின் நலன் கருதி அனைத்து தரப்பு அனைத்து தரப்பு மக்களும் போராட்டத்தில் கலந்து கொண்டு போராட்டம் வெற்றியடைய ஒத்துழைப்பு நல்குமாறு இரயில் உபயோகிப்பாளர்கள் சங்கம் சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு.

இரயில் உபயோகிப்பாளர்கள் சங்கம் முத்துப்பேட்டை Cell : 9443384338


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments