மீமிசல் அருகே முத்துக்குடா கடற்கரை பகுதியில் ரூ.3 கோடியில் சுற்றுலா தலம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடற்கரை பகுதி குறிப்பிட்ட அளவு உள்ளது. இதில் முத்துக்குடாவில் கடற்கரையோரம் சுற்றுலா தலம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. நீர் விளையாட்டுகள், படகு சவாரி, நடைபாதை, கடற்கரை விளையாட்டுகள் மற்றும் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. ரூ.3 கோடி மதிப்பீட்டில் இப்பணிகள் நடைபெற உள்ளது. முத்துக்குடாவில் அலையாத்தி காடுகளை பொதுமக்கள் சுற்றிப்பார்க்கும் வகையில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. முத்துக்குடாவை சுற்றுலா தலமாக்க மாவட்ட கலெக்டர் கவிதாராமு பெரும் நடவடிக்கை மேற்கொண்டார். அவரது முயற்சியினால் இத்திட்ட பணிகள் நடைபெற உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திற்கு இத்திட்டம் மிகப்பெரிய வரபிரசாதமாகும்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments