திருவாரூர் மாவட்டம் புலிவலத்தை சேர்ந்த பிர்தௌஸ் என்பவர் கிடைத்துவிட்டார்.


திருவாரூர் மாவட்டம் புலிவலத்தை சேர்ந்த பிர்தௌஸ் என்ற முதியவர்  புலிவலத்திலிருந்து உறவினர்களுடன் திருமண நிகழ்வுக்கு திருச்சி வந்த நிலையில் திருச்சி அப்போலோ மருத்துவமனை, பழைய பால் பண்ணை அருகில் கடந்த 06.06.2022 திங்கட்கிழமை மதியம் 3.30 மணியளவில் வழி தவறி சென்று விட்டார். இவர் சற்று ஞாபக மறதி உடையவர். இவரை காணவில்லை எனவும் இவரை எங்கு பார்த்தாலும் உடனடியாக தகவல் தந்து உதவுமாறு  07.06.2022 செவ்வாய்க்கிழமை நேற்று நமது GPM மீடியாவில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

அதனடிப்படையில்  இன்று 08.06.2022 புதன்கிழமை மதியம் 12 மணியளவில் திருச்சி TVS டோல்கேட்டில் ஒரு ஜூஸ் கடையில் வைத்து புலிவலத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் இவரை அடையாளம் காணப்பட்டு உறவினர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு உறவினர்கள் வந்து அழைத்து சென்றுவிட்டனர். இந்த செய்தியை பகிர்ந்த அனைத்து நண்பர்களுக்கும் மற்றும் மற்ற பிற இயக்கங்களுக்கும் அவரது குடும்பத்தார்கள் சார்பாகவும், GPM மீடியா சார்பாகவும் நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
 
GPM மீடியா மூலம் உறுதி செய்யப்பட்ட தகவல்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments