புதுக்கோட்டை மாவட்டத்தில் 85 கிராம ஊராட்சிகளில் இன்று சிறப்பு முகாம்புதுக்கோட்டை மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தில் 85 கிராம ஊராட்சிகளில் சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜூன் 10) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு அறிவித்துள்ளாா்.

புதுக்கோட்டையில் வடவாளம், 9ஏ நத்தம்பண்னை, கவிநாடு மேற்கு, முள்ளூா், கந்தா்வகோட்டையில் கல்லாக்கோட்டை, துவாா், குளத்தூா், திருவரங்குளத்தில் மாங்காடு, வடகாடு, வெண்ணாவல்குடி, கறம்பக்குடியில் மாங்கோட்டை, முள்ளங்குறிச்சி, பிலாவிடுதி, அறந்தாங்கியில் மறமடக்கி, திருநாளூா், பெருங்காடு, ஆவுடையாா்கோவிலில் கரூா், வீரமங்களம், புத்தாம்பூா், மணமேல்குடியில் வெட்டிவயல், கீழமஞ்சகுடி, காரக்கோட்டை , திருமயத்தில் துளையானூா், ஆதனூா், லெம்பலக்குடி, பொன்னமராவதியில் ஆலவயல், அரசமலை, மரவாமதுரை, அன்னவாசலில் எண்ணை, பரம்பூா், ராப்பூசல், விராலிமலையில் கத்தலூா், பூதக்குடி, கொடும்பாளூா், குன்றாண்டாா்கோவிலில் பள்ளத்துப்பட்டி, அண்டக்குளம், புலியூா் ஆகிய 85 ஊராட்சிகளில் முகாம் நடைபெறவுள்ளது.

இம்முகாமில் பட்டா மாறுதல், பயிா்க் கடன் விண்ணப்பம் பெறுதல் ஆகியன மேற்கொள்ளப்படும். இதில், விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments