அதிரையில் கோடை கால முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு!
ஷம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பு-SISYA சார்பில் மே 21 முதல் ஜூன் 6 வரை நடைபெற்ற கோடைக்கால பயிற்சி முகாமின் நிறைவு நிகழ்ச்சி சங்க வளாகத்தில் நடைபெற்றது.

இந்த முகாமில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பங்கேற்பு சான்றிதழ் மற்றும் தொடர்ச்சியாக விடுப்பு எடுக்காமல் வந்த மாணவர்களுக்கு எழுதுபொருள், புத்தகம் உள்ளிட்டவைகளை ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் செயலாளர் A.H.ஹாஜா ஷரீப், துணைத்தலைவர் A.ஷரஃபுதீன், ஷிஸ்வா அமீர் M.S.M.யூசுஃப், சிஸ்யா தலைவர் Z.முஹம்மது தம்பி, செயலாளர் நஜ்புதீன், பொருளாளர் M.R.சாலிஹ், துணைத்தலைவர் M.F.முஹம்மது சலீம் மற்றும் நிர்வாகிகள் பரிசுகளை வழங்கி மாணவர்களை பாராட்டினர்.

இதற்கான ஏற்பாட்டினை சிஸ்யாவின் செயற்குழு உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தனர். கலந்து கொண்ட மாணவர்கள் வருங்காலங்களில் இதுபோன்ற பயனுள்ள முகாம்களை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர். சிஸ்யாவின் ஆக்கப்பூர்வமான பணிகள் உத்வேகத்துடன் தொடர்ந்து நடைபெறும் என்றும் இம்முகாம் வெற்றிபெற உடலால் உழைத்து, உளமாற பிரார்த்தித்து, பொருளால் உதவிய அனைவருக்கும் எனவும் ஷம்சுல் இஸ்லாம் இளைஞர் அமைப்பு தெரிவித்துள்ளது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments