மக்களின் சிரமத்தை போக்க தொண்டியை தாலுகாவாக அறிவிக்க கோரிக்கை




    தொண்டியை மையமாக வைத்து ஏராளமான கிராமப்புறங்கள் உள்ளது. அரசின் அனைத்து தேவைக்கும் பல கிலோ மீட்டர் உள்ள திருவாடானைக்கு செல்ல வேண்டியுள்ளது. அத னால் தொண்டியை தனி தாலுகாவாக அறிவிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாவட்டத்தில்  தொண்டி வளர்ந்து வரும் நகர் பகுதியாகும். தொண் டியை சுற்றிலும் ஏராளமான கிராம பகுதிகள் உள்ளது. காரங்காடு,முள்ளிமுனை உட்பட எஸ். பி.பட்டினம் வரையிலும் கடற்கரை பகுதியாகும்.

இப்பகுதி மக்கள் அரசின் நலத்திட்ட உதவிகள் பெருவது உள்ளிட்ட அனைத்து அரசு பணிக்கும் நீண்ட தூரம் உள்ள திருவாடானைக்கு செல்ல வேண்டியுள்ளது.

இது இப்பகுதி மக்களுக்கு கடும் சிரமத்தை ஏற்ப்படுத்தி வருகிறது. கடந்த வருடம் திருவாடானை தாலுகாவில் இருந்த R.S மங்களம் பகுதியை தனி தாலுகாவாக அறிவித்தது இப்பகுதி மக்களுக்கு பெரும் பயனாக உள்ளது. இதே போல் தொண்டியை தனி தாலுகாவாக அறிவித் தால் இப்பகுதி மக்கள் பயன் அடைவார்கள்.

தமுமுக மாவட்ட செயலாளர் ஜிப்ரி கூறியது. 

எஸ்.பி.பட்டிணத்தி லிருந்து திருவாடானை செல்ல வேண்டும் என்றால் தொண்டி வழி யாக சுமார் 30 கி.மீட்டர் தூரம் செல்ல வேண்டியுள்ளது. இதே போல் முள்ளிமுனை எம்.ஆர். பட்டினம் உள்ளிட்ட கடைகோடி கிராமங்களிலிருந்து அலுவல் பணியின் காரணமாக மக்கள் செல்வதில் கடும் சிரமப்படுகின்றனர். தற்போது பேரூராட்சியாக உள்ள தொண்டியை தனி தாலுவாக அறிவிக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments