மின்னணு வாக்குப்பதிவு எந்திர கிடங்கு கட்டிடம்கலெக்டர் கவிதாராமு திறந்து வைத்தார்




இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவி மற்றும் வாக்கினை உறுதி செய்யும் கருவி ஆகியவற்றினை பாதுகாப்பான முறையில் வைத்திடும் வகையில் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ரூ.2 கோடியே 64 லட்சம் மதிப்பீட்டில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரக்கிடங்கு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
இதனை கலெக்டர் கவிதாராமு நேற்று திறந்து வைத்தார். கட்டிடத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திர பாதுகாப்பு அறை, அலுவலர்களுக்கான அறை, சோதனை அறை, சாய்வுதளம், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை ஏற்றி இறக்குவதற்கான இடம், கழிவறை மற்றும் பாதுகாப்பு அறைகளுடன் 755 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் பாதுகாப்பிற்காக கண்காணிப்பு கேமரா வசதி மற்றும் தீயணைக்கும் கருவி உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளுடன் அமையப்பெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, தனி மாவட்ட வருவாய் அலுவலர் (தேசிய நெடுஞ்சாலை நிலமெடுப்பு) சரவணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தங்கவேல், வருவாய் கோட்டாட்சியர்கள் அபிநயா (புதுக்கோட்டை), சொர்ணராஜ் (அறந்தாங்கி), குழந்தைசாமி (இலுப்பூர்), பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சிந்தனைசெல்வி, உதவிப்பொறியாளர் பாஸ்கர், தனி வட்டாட்சியர் (தேர்தல்) கலைமணி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments