கீரனூரில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்    
    நபிகள் நாயகம் குறித்து பா.ஜ.க.வை சேர்ந்த நிர்வாகிகள் இழிவான கருத்துக்களை பேசியதை கண்டித்து புதுக்கோட்டை மேற்கு மாவட்டம், கீரனூர் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கீரனூர் காந்தி சிலை முன்பு நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் தீன்பாட்சா தலைமை தாங்கினார். நகர செயலாளர் சேக் அலாவுதீன் வரவேற்றார். மாவட்ட தலைவர் ஸலாஹுதீன் முன்னிலை வகித்தார். திருச்சி மண்டல தலைவர் இமாம் ஹஸ்ஸான் பைஜி, மாவட்ட துணைத்தலைவர் முகைதீன் தாஹா, மாவட்ட பொதுச்செயலாளர் ஜகுபர் அலி, தொழிற்சங்க பொருளாளர் முஜிபுர் ரகுமான் மற்றும் கீரனூர் பகுதி எஸ்.டி.பி.ஐ. கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் ஜலாலூதீன் நன்றி கூறினார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments