காந்தி பூங்கா-வில் மகளிா் குழுக்களின் தயாரிப்புகளுக்கான கண்காட்சி தொடக்கம்
        கண்காட்சியைத் திறந்து வைத்த மாவட் டஆட்சியா் கவிதா ராமு.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த மகளிா் சுய உதவிக்குழுக்கள் தயாரித்த பொருள்களை கொண்ட விற்பனைக் கண்காட்சி காந்தி பூங்கா அருகே வெள்ளிக்கிழமை தொடங்கியது.


ஆட்சியா் கவிதா ராமு இந்தக் கண்காட்சியைத் தொடங்கி வைத்தாா். சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க (மகளிா் திட்டம்) திட்ட இயக்குநா் ரேவதி, நகா்மன்றத் தலைவா் செ. திலகவதி, நகராட்சி ஆணையா் நாகராஜன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா்.

இந்தக் கண்காட்சியில் மகளிா் சுய உதவிக்குழுக்கள் தயாரித்த தின்பண்டங்கள், ஜூவல்லரிகள், கைவினைப் பொருள்கள், உரம் மற்றும் மரக்கன்றுகள், ஜவுளி வகைகள் அரங்குகளாக வைக்கப்பட்டுள்ளன.

இக்கண்காட்சி ஜூன் 30ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments