'சைபர் கிரைம்' எச்சரிக்கைத் தொடர் 10 உயிர்ப்பலி வாங்கும் ஆன்லைன் சூதாட்டங்கள் - முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. முனைவர் மு.ரவி
"ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள்" என்று சொல்லப்ப டுவதுண்டு. தினந்தோறும் பல்லாயிரம்பேர் 'ஆன்லைன்' சூதாட்டங்களில் பல கோடி ரூபாய்களை இழந்து கொண்டிருப்பது பற்றியும், இவர்களில் சிலர் தற்கொலை செய்து கொள்வது பற்றியும் எல்லோரையும் எச்சரிக்க விரும்புகிறேன். சென்னையை சேர்ந்த வங்கி அதிகாரி வரதன் பன்னாட்டு வங்கி ஒன்றில் ஊழியராக பணியாற்றி வந்தார். ஆண்டுக்கு ரூ.25 லட்சம் அவருக்கு சம்பளம். திடீரென ஒருநாள் 'ஆன்லைன்' ரம்மி' விளை யாட்டில் ஈடுபடத்தொடங்கிய அவர், சில மாதங் களில் தான் சேமித்து வைத்த ஒரு கோடி ரூபாயை இழந்துவிட்டார்.


இதனால் ஏற்பட்ட இழந்த சேமிப்பை மீட்கவேண்டும் என்ற வெறி யில் நண்பர்கள், உறவினர்களிடம் லட்சக்கணக் கில் கடன் வாங்கி "ஆன்லைனில்’ “ரம்மி” விளை யாடி அதையும் இழந்துவிட் நெருக்கடிகளால் குடும்பத் தகராறு முற்றிய நிலையில், வரதன் தனது மனைவியை கிரிக்கெட் மட்டையால் தாக்கி கொன்றுள்ளார். மேலும் தனது 2 குழந்தைகளையும் கழுத்தை நெரித்து கொன்று விட்டு. தானும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.

இதேபோன்று, 'ஆன்லைன்' சூதாட்டமான 'ரம்மி' விளையாடி அதில், சுமார் ரூ.7 லட்சம் வரை இழந்த காவலர் ஒருவர் கடனாளியாகி, தனது கையில் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றார். கடந்த சில தினங்களுக்கு முன்பாக, சென்னையில் வசித்து வந்த தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் 'ஆன் லைன்' சூதாட்ட விளையாட்டில் சுமார் ரூ.35 லட்சம் வரை இழந்ததால் கடன் சுமை அதிக மாகி, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட நிகழ்வும் பரபரப்பு செய்தியாக பேசப்பட்டது. இணையதள சூதாட்டமான 'ரம்மி', 'ரம்மி கல்ச் சர், 'போக்கர்" போன்ற 'ஆன்லைன்' சூதாட்ட விளையாட்டுகளின் மீது மாணவர்கள், இளை ஞர்கள், தனியார் மற்றும் அரசு அலுவலர்கள் பல்லாயிரக்கணக்கானோர் மோகம் கொண்டு அதற்கு அடிமையாகிவருவது வேதனை தரும் உண்மை. தெரிந்தவர்களிடமும், 'கிரெடிட்' ‘கார்டு'களிலும் கடனை வாங்கி விளையாடி, மொத்த பணத்தையும் இழந்து, இறுதியில் தற் கொலை செய்துகொள்ளும் நிகழ்வுகள் அதிக ரித்து வருகின்றன.

ஆசை காட்டி மோசம் செய்வதில் 'ஆன்லைன்' சூதாட்ட விளையாட்டு நிறுவனங்கள் கை தேர்ந்தவை. எளிதாக பணம் சம்பாதிக்க லாம் என்ற கவர்ச்சிகரமான விளம்பரங் களை இவர்கள் தொலைக்காட்சிகளிலும், இணையதளங்களிலும், குறுஞ்செய்திகள் (SMS) மூலமாகவும் பரப்புகிறார்கள். இளை ஞர்களின் கனவு நாயகர்களான கிரிக்கெட் வீரர்கள், திரைப்பட நடிகர்கள்-நடிகை கள் போன்றவர்களை விளம்பர தூதர்களாக நடிக்க வைத்து, இந்த சூதாட்டங்கள் மீது ஒரு நம்பிக்கையை உருவாக்குகிறார்கள். 'நான் ரூ.50 லட்சம் ஜெயித்துவிட்டேன். நீங் களும் விளையாடி ஜெயிக்க வாருங்கள்' என்ப துபோன்ற புகைப்படங்களுடன் கூடிய பொய் சாட்சிகளை பரப்புகிறார்கள்.

ஆரம்பத்தில் பணம் ஜெயிப்பதுபோல் பயனர் களுக்கு ஆசைகாட்டிவிட்டு, பின்னர் அவர் களை ஒட்டுமொத்தமாக ஒட்டாண்டி ஆக்குவது தான் 'ஆன்லைன்' சூதாட்ட விளையாட்டுகளின் அடிப் படை 'லாஜிக்'. இதில் தன் னுடன் விளையாடுவது ஏதோ ஒரு முகம் தெரியாத மனிதர் என்று பயனர்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில் தன்னு டன் விளையாடுவது வெல் லப்பட முடியாத 'கம்ப்யூட்டர் புரோகிராம்' என்பது இந்த அப்பாவிகளுக்கு
புரிவதில்லை.

இந்த மனிதாபிமானமற்ற சூதாட்ட நிறுவ னங்களின் விளம்பர தூதர்களாக நடிக்கக் கூடாது என்று பிரபலங்களுக்கு கடும் கண்ட னங்கள் எழுந்துள்ளன. “ரம்மி”, கல்ச்சர், “போக் கர்" உள்ளிட்ட இணையதள சூதாட்ட நிறுவ னங்களுக்கு நிரந்தரமாக தடை விதிப்பது பற்றி மத்திய, மாநில அரசுகள் பரிசீலித்து வருகின் றன. 'உங்கள் மூளையை உபயோகித்து அதிக பணம் வெல்லுங்கள்' என்ற விளம்பரப்படுத்தப் படும் ஆன்லைன் சூதாட்டங்கள் அனைத்துமே மோசடிகள் என்பதை புரிந்துகொள்ளுங்கள். நீங்கள் விளையாடுவது தனி நபருடன் அல்ல. ஆயிரம் மனித மூளைகளால் வடிவமைக்கப்பட்ட ‘கம்ப்யூட்டர் புரோகிராம்'களுடன் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

தொடக்கத்தில், சிறிது பணம் ஜெயிக்க வைத்து ஆசைகாட்டி அடிமையாக்குவது, பின் னர் அதிக பணம் கட்டி விளையாட வைத்து ஓட்டாண்டி ஆக்குவது இதுதான் 'ஆன்லைன்' சூதாட்ட செயலிகளின் 'புரோகிராமிங் லாஜிக்”, இப்படி திட்டமிட்ட மோசடிக்காகவே உருவாக் கப்பட்ட கம்ப்யூட்டர் புரோகிராம்'களுடன் உங்க ளைப்போன்ற தனிமனிதர்களால் விளை யாடி ஜெயிக்கவே முடியாது என்பதை உணர்ந்துகொண்டு ஒதுங்கிவிடுங் கள். 'ஆன்லைன்' சூதாட்டங்களை யும், அதனை ஆதரிப்பவர்களையும் ஒட்டுமொத்தமாக புறக்கணியுங்கள். (தொடரில் விவரிக்கப்படும் சம்ப வங்களில் வரும் பெயர்கள்
மாற்றப்பட்டுள்ளன.) தொடரும்...நண்றி-தினதந்தி 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments