புதுக்கோட்டை வழியாக திருச்சி-காரைக்குடி டெமு ரெயில் 18-ந் தேதி முதல் இயக்கம்
                        புதுக்கோட்டை வழியாக திருச்சி-காரைக்குடி-விருதுநகர் இடையே டெமு ரெயில் சேவை இயக்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்த சேவை நிறுத்தப்பட்டது. இதில் விருதுநகர்-காரைக்குடி இடையே மட்டும் கடந்த நவம்பர் மாதம் முதல் சேவை தொடங்கப்பட்டது. காரைக்குடி-திருச்சி இடையே மட்டும் சேவை தொடங்கப்படாமல் இருந்தது. காரைக்குடி-திருச்சி இடையே மீண்டும் டெமு ரெயிலை இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்தநிலையில் இந்த ரெயில் சிறப்பு ரெயிலாக வருகிற 18-ந் தேதி முதல் இயக்கப்பட உள்ளது. திருச்சியில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு புதுக்கோட்டைக்கு மாலை 4.53 மணிக்கு வரும். பின்னர் அந்த ரெயில் அங்கிருந்து புறப்பட்டு காரைக்குடிக்கு மாலை 5.50 மணிக்கு சென்றடையும். காரைக்குடியில் இருந்து வருகிற 19-ந் தேதி முதல் காலை 9.40 மணிக்கு புறப்பட்டு புதுக்கோட்டைக்கு காலை 10.22 மணிக்கு வந்து சேரும். அதன்பிறகு அங்கிருந்து திருச்சிக்கு காலை 11.35 மணிக்கு சென்றடையும்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments