மணமேல்குடி ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது

        மணமேல்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் பரணி கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. ஒன்றியக்குழு துணைத்தலைவர் சீனியர், ஆணையர் வீரப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசுகையில் வெள்ளூர் ஊராட்சியில் புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைத்து குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும். கீரனூர் ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு அமைத்து தர வேண்டும். கட்டுமாவடி உப்பளம் சாலை பகுதியில் வடிகால் அமைத்து தர வேண்டும் என கூறினர். இதையடுத்து, ஒன்றியக்குழு தலைவர் பரணி கார்த்திகேயன் கூறுகையில், குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் புதிதாக 23 ஆழ்குழாய் கிணறு அமைக்கப்படும். மேலும் மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், சாலைவசதி, மின்சார வசதி ஆகியவை செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் அரசமணி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சித்திரைபாண்டி உள்பட ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments