திருச்சி டு கீரனூர் : ஒடும் பேருந்தில் 8 பவுன் தங்க நகைகள் திருட்டு  


திருச்சிராப்பள்ளி டு கீரனூர் ஒடும் பேருந்தில் 8 பவுன் தங்க நகைகள் திருட்டு போனது.
 
திருச்சி சிந்தாமணி பகுதியை சேர்ந்தவர் ஜான் ஆண்ட்ரோபூர்ணிமா (வயது 35). இவர் கீரனூரில் உள்ள மாமியார் வீட்டுக்கு வருவதற்காக கைக்குழந்தையுடன் திருச்சியிலிருந்து அரசு பஸ்சில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு அருகில் 2 பெண்கள் அமர்ந்திருந்தனர்.

இதையடுத்து கீரனூர் பஸ் நிலையம் வந்ததும் குழந்தையையும், கை பையை எடுத்து தோளிலும் போட்டுக் கொண்டு கீழே இறங்கி வீட்டிற்கு வந்தார். பின்னர் பையை திறந்து பார்த்த போது அதில் வைத்திருந்த 4 பவுன் தங்க ஆரம், 4 பவுன் நெக்லஸ் உள்பட 8 பவுன் தங்க நகைகள் திருட்டு போனது குறித்து அவருக்கு தெரியவந்தது.

இதையடுத்து அவர் இதுகுறித்து கீரனூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments