ஆவுடையார்கோவில் அருகே தம்பதியை தாக்கி நகை-பணம் திருட்டு

    ஆவுடையார்கோவில் அருகே ஆலமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் வேதமாணிக்கம் (வயது 62). இவரது மனைவி ஏஞ்சல் மேரி (50). இவர்கள் இருவரும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது மர்மநபர்கள் 3 பேர் கதவை தட்டியுள்ளனர். இதையடுத்து வேதமாணிக்கம் கதவை திறந்த போது, அவரை கீழே தள்ளிவிட்டு அவர்கள் கையில் வைத்திருந்த ஆயுதங்களால் வேதமாணிக்கம் மற்றும் அவரது மனைவியை தாக்கினர். பின்னர் வீட்டில் இருந்த 3 பவுன் நகை மற்றும் ரூ.ஆயிரம், செல்ேபான் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிக் கொண்டு சென்று விட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன், கோட்டைப்பட்டினம் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன், கோட்டைப்பட்டினம் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் திருப்புனவாசல், மீமிசல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். காயமடைந்த தம்பதி அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments