இனி மெயில் அனுப்ப இணைய சேவை அவசியம் இல்லை - ஜிமெயிலில் வந்தாச்சு புது அம்சம்



 


இந்த அம்சம் கூகுள் குரோம் பிரவுசரில் மட்டுமே சீராக இயங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. கூகுள் குரோமிலும் Incognito mode-ல் இந்த அம்சம் இயங்காதாம்

இணைய வசதியே இல்லாமல் இனி ஜிமெயில் மெசேஜ்களை அனுப்ப முடியும். அது எப்படி என்பதை தற்போது பார்க்கலாம். இதுகுறித்து கூகுள் சப்போர்ட் வெளியிட்டிருக்கும் தகவலின் படி இனி இணைய வசதி இல்லாமல் நேரடியாக mail.google.com தளத்தின் மூலம் ஜிமெயில் மெசேஜ்களை படிக்கவும்., பதில் அனுப்பவும் முடியும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஜிமெயில் மெசேஜ்களை இணைய சேவை இன்றி பயன்படுத்த, முதலில் கூகுள் குரோம் பிரவுசரை டவுன்லோடு செய்ய வேண்டும். ஏனெனில் இந்த அம்சம் கூகுள் குரோம் பிரவுசரில் மட்டுமே சீராக இயங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. கூகுள் குரோமிலும் Incognito mode-ல் இந்த அம்சம் இயங்காதாம்.

முதலில் ஜிமெயில் ஆப்லைன் செட்டிங்ஸை ஓபன் பண்ண வேண்டும். அடுத்து அதில் உள்ள 'Enable offline mail' என்கிற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இதன்பின்னர் எத்தனை நாட்களுக்கான ஜிமெயில் மெசேஜ்களை sync செய்ய வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும். இறுதியில் 'Save changes' ஆப்ஷனை க்ளிக் செய்த பின் ஜிமெயில் மெசேஜ்களை இணைய சேவை இன்றி பயன்படுத்தலாம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments