கிட்டங்கி பராமரித்தல் குறித்து விவசாயிகள், வியாபாரிகள், ஆலை உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி





        புதுக்கோட்டை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில் மத்திய கிடங்கு மேம்பாடு ஒழுங்கு முறை ஆணையம் மற்றும் மதுரை கூட்டுறவு மேலாண்மை பயிற்சிக் கழகம் சார்பில் விவசாயிகள், வியாபாரிகள், ஆலை உரிமையாளர்களுக்கு கிட்டங்கி பராமரித்தல் குறித்த விழிப்புணர்வு பயிற்சி நடந்தது. புதுக்கோட்டை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் உமாமகேஸ்வரி தலைமை உரையாற்றினார். புதுக்கோட்டை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளரும், மேலாண்மை இயக்குனருமான தனலட்சுமி சிறப்புரையாற்றினார். புதுக்கோட்டை சரக துணைப்பதிவாளர் அப்துல் சலீம் வரவேற்றார். மதுரை கூட்டுறவு மேலாண்மை பயிற்சிக் கழக விரிவுரையாளர் அழகுபாண்டியன் பயிற்சி நோக்கம் மற்றும் eNWR (மின்னணு மாற்றத்தக்க கிடங்கு ரசீது) குறித்தும் பேசினார். மாநில சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் ஓய்வுபெற்ற ஆய்வு அதிகாரி ரமேஷ் எதிர்கால உணவு தேவை, விதை தேவை குறித்தும், அறிவியல் பூர்வமாக அவற்றை சேமித்து வைப்பது, தானியங்களை நுண்ணுயிர்கள், பூச்சிகள், எலிகள் போன்றவற்றிடம் இருந்து பாதுகாக்கும் முறை குறித்து பயிற்சி அளித்தார். இந்த பயிற்சியில் விவசாயிகள், வியாபாரிகள், ஆலை உரிமையாளர்கள் மற்றும் கூட்டுறவு அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குனர் குமார் நன்றி கூறினார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments