புதுக்கோட்டை - மதுரை - புதுக்கோட்டை இணைப்பு ரயில் (தினசரி)


புதுக்கோட்டை-மதுரை-புதுக்கோட்டை இணைப்பு ரயில்(தினசரி)

வரும்(22/06/22) முதல் புதுக்கோட்டை-மதுரை-புதுக்கோட்டை இடையே இணைப்பு ரயில் மூலம் பயணிக்கலாம். பொதுவாக மதுரைக்கு புதுக்கோட்டையிலிருந்து பேருந்தில் சராசரியாக 02:30 மணிநேரம் ஆகக்கூடும். மேலும் மதுரை மத்தியபேருந்து நிலையம் மதுரை புறநகர் பகுதியில் அமைத்துள்ளது.  இருப்பினும் அங்கிருந்து முக்கியப்பகுதிகளுக்கு செல்ல பெரியார் பேருந்து நிலையம் செல்லவேண்டியிருக்கும். காத்திருப்பு நேரம் பேருந்து பயணம் உள்ளிட்டவற்றை கணக்கிட்டால் மொத்தமாக புதுக்கோட்டையிலிருந்து பயணிக்க 03:00 முதல் 03:15 மணிநேரம் வரை ஆகக்கூடும்.  ஆனால் மதுரை சந்திப்பு  மதுரையின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது, இதற்கு அருகாமையிலேயே பெரியார் பேருந்து நிலையம், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் போன்ற முக்கிய பகுதிகளும் அமைத்துள்ளன. புதுக்கோட்டை-மதுரை பேருந்து கட்டணம்- ₹90/- மதுரை மத்திய பேருந்து நிலையம்-பெரியார் பேருந்து நிலைய கட்டணம்-17/-(தோராயமாக) என மொத்தம் ₹107 முதல் ₹110 ரூபாய் வரை செலவாகக்கூடும். ஆனால் மதுரை-புதுக்கோட்டை இணைப்பு ரயில் கட்டணம் இரண்டு ரயில்களும் சேர்த்து மொத்தமாக ₹65/- ரூபாய் மட்டுமே செலவாகும். பயணநேரம் புதுக்கோட்டை-மதுரை - 03:38 மணிநேரம் & மதுரை-புதுக்கோட்டை- 03:43 மணிநேரம் ஆகும். பயண செலவு பேருந்தை விட ₹45 ரூபாய் வரை குறைவு. மதுரை மட்டுமல்லாது மானாமதுரை-மதுரை க்கு இடையில் உள்ள #ராஜகம்பீரம், #திருப்பாச்சேத்தி, #திருபுவனம், #மதுரை_கிழக்கு போன்ற பகுதிகளுக்கும் இந்த இணைப்பு ரயில் மூலம் சென்று திரும்பலாம்.

புதுக்கோட்டை ரயில் நிலையத்திலேயே நீங்கள் அட்டவணையில் உள்ள ரயில் நிலையத்தை குறிப்பிட்டு உடனடியாக நேரடி முன்பதிவற்ற(Unreserved) டிக்கெட் பெற்று இரண்டு ரயில்களிலும் தொடர்ந்து பயணிக்கலாம். ஒரு முறை டிக்கெட் பெற்றால் இரண்டு ரயில்களிலும் பயணிக்க போதுமானது.

குறிப்பு: பொதுவாக 06829/திருச்சி-மானாமதுரை டெமு ரயில் நிர்ணயிக்கிப்பட்டுள்ள(Scheduled Arrival) 01:20 க்கு 15 நிமிடங்கள் முதல் 20 நிமிடங்கள் முன்னரே மானாமதுரை சந்திப்பிற்கு சென்றுவிடும் என்பதால் மானாமதுரையிலிருந்து மதுரை பயணிக்க இரண்டு ரயில்களுக்கு போதுமான கால இடைவெளி இருக்கும் என்பதையும் நினைவில் கொள்ளவும். 

நன்றி: Pudukottai Rail Users 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments