புதுக்கோட்டை - ராமேஸ்வரம் - புதுக்கோட்டை இணைப்பு ரயில் (தினசரி) அட்டவணை!


புதுக்கோட்டை-ராமேஸ்வரம்-புதுக்கோட்டை இணைப்பு ரயில்(தினசரி) அட்டவணை!

வரும்(22/06/22) முதல் புதுக்கோட்டை-ராமேஸ்வரம் இடையே இணைப்பு ரயிலிலும் பயணிக்கலாம். இந்த இரண்டு ரயில்களிலும் பயணிக்க புதுக்கோட்டை ரயில் நிலையத்திலேயே பரமக்குடி, ராமநாதபுரம், ராமேஸ்வரம் என நீங்கள் செல்லும் பகுதிக்கு செல்ல நேரடியாக முன்பதிவற்ற(Unreserved) டிக்கெட் எடுத்து பயணிக்கலாம். புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் ஒரு முறை எடுத்த டிக்கெட் இந்த இரண்டு ரயில்களிலும்     தொடர்ந்து பயணிக்க போதுமானது. இதே முறையில் ராமேஸ்வரத்திலிருந்து புதுக்கோட்டை வரலாம். 

பொதுவாக புதுக்கோட்டையிலிருந்து ராமேஸ்வரம் சென்று திரும்ப தினசரி 3 ரயில்கள், வாரத்தில் ஒரு நாள் மட்டும் இயங்கும் 4 நேரடி ரயில்கள் உள்ளன. இருப்பினும் தினசரி காலை 07:55 மணிக்கு பிறகு பகலில் புதுக்கோட்டையிலிருந்து ராமேஸ்வரம் செல்லவும், மறுமார்கத்தில் தினசரி பகல் 02:35 முன்னர் ராமேஸ்வரத்திலிருந்து புறப்பட்டு புதுக்கோட்டை வரவும் ரயில்கள் இல்லை. எனவே இந்த இணைப்பு ரயில் உங்களுக்கு பெரிதும் உதவும். இந்த இணைப்பு புதுக்கோட்டையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு செல்வதற்கு  & ராமேஸ்வாரத்திலிருந்து புதுக்கோட்டை வருவதற்கும் தினசரி கிடைக்கும்.

குறிப்பு: அட்டவணையில் உள்ள கட்டண விவரம் 'புதுக்கோட்டை' ரயில் நிலையத்திற்கானது என்பதை நினைவில் கொள்ளவும். 

நன்றி: Pudukottai Rail Users 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments