அறந்தாங்கியில் இருந்து கட்டுமாவடி வழியாக புதுச்சேரிக்கு அரசு பேருந்து இயக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை


அறந்தாங்கியில் இருந்து கட்டுமாவடி வழியாக புதுச்சேரிக்கு அரசு பேருந்து இயக்க வேண்டும் என அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அறந்தாங்கி, ஆவு டையார்கோவில், மணமேல்குடி, கட்டுமாவடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் புதுச்சேரிக்கு பணி நிமித்தமாக சென்று வருகின்ற னர். புதுச்சேரியில் உள்ள மிகப்பெரிய அனைத்து வசதிகளும் கொண்ட ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக வும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சென்று வருகின்றனர். இவர்கள் தற்போது புதுச்சேரி செல் வதற்கு அறந்தாங்கியில் இருந்து புதுக்கோட்டை, திருச்சி, விழுப்புரம் வழியாக சென்று வருகின்றனர். கிழக்கு கடற்கரை சாலையான கட்டுமாவடி வழியாக ஏராளமான அரசு பேருந்துகள் புதுச்சேரிக்கு சென்றபோதிலும், பேருந்து கள் கட்டுமாவடி நிறுத்தத் தில் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்லாததால், கட்டுமாவடியில் இருந்து பல பேருந்துகள் மாறி, புதுச்சேரி செல்லவேண்டி உள்ளது. இதனால் பொது மக்கள் அதிக கட்டணம் செலுத்தி பேருந்துகளில் செல்ல வேண்டி உள்ளது. மேலும் கூடுதல் பயண நேர மும் ஆகிறது.

தமிழகத்தில் பொது மக்களின் தேவைகளை உணர்ந்து பல்வேறு பகுதிகளுக்கு தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் அரசு பேருந்துகளை இயக்கி வருகிறது. அது போல அறந்தாங்கி பகுதி மக்களின் தேவைகளை உணர்ந்து அறந்தாங்கியில் இருந்து கட்டுமாவடி வழியாக அரசு பேருந்துகளைடும். போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுக்கவேண் டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அறந்தாங்கியை சேர்ந்த பயணி ஒருவர் கூறியதாவது: 

அறந்தாங்கி பகுதியில் இருந்து தினசரி ஏராளமானவர்கள் பல்வேறு பணிகளின் நிமித்தமாக புதுச்சேரி சென்று வருகின்றனர்.தற்போது புதுச்சேரிக்கு நேரடி பேருந்து வசதி இல்லாததால், நாங் கள் பல பேருந்துகள் மாறி மாறி செல்லவேண்டி உள் ளது. இதனால் நேரமும், பணமும் வீணாகிறது. மேலும் நோயாளிகளை அழைத்துச் செல்லும் போது, பல பேருந்துகள் மாறும் போது பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. எனவே அறந்தாங்கியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை (கட்டுமாவடி) வழி யாக புதுச்சேரிக்கு நேரடி நேரடி பஸ் வசதி செய்து தர வேண்டும்

 இவ்வாறு அவர் கூறினார் ‌

நன்றி: தினகரன்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments