புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக எஸ்.மணிவண்ணன் பதவியேற்பு.


புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணிபுரிந்து வந்த சாமி சத்தியமூர்த்தி தஞ்சாவூர் மகாராஜா சரபோஜி சரசுவதி மகால் நூலகம் மற்றும் ஆய்வுமையத்திற்கு நிர்வாக அலுவலராகவும் சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணிபுரிந்து வந்த எஸ்.மணிவண்ணன் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவராகவும் பணியிட மாறுதல் செய்யப்படனர்.அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக எஸ்.மணிவண்ணன் திங்கட்கிழமை பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.

முதன்மைக் கல்வி அலுவலராக பொறுப்பு ஏற்றுக் கொண்ட மாவட்ட முதன்மைக் கல்வி  அலுவலர் எஸ்.மணிவண்ணன் மற்றும் தஞ்சாவூர் மகாராஜா சரபோஜி சரசுவதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மைய நிர்வாக அலுவலகராக மாறுதல் பெற்றுள்ள சாமி.சத்தியமூர்த்தி ஆகிய இருவரும் மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமுவை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

நிகழ்வின் போது ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாவட்ட உதவி திட்ட அலுவலர் தங்கமணி,மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் சுதந்திரன்,பள்ளித்துணை ஆய்வாளர்கள் வேலுச்சாமி,குருமாரிமுத்து ,இல்லம் தேடி கல்வி திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குமரேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் புதியதாக பொறுப்பேற்றுக் கொண்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எஸ்.மணிவண்ணன் அவர்களையும்,தஞ்சாவூர் மகாராஜா சரபோஜி சரசுவதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மைய நிர்வாக அலுவலராக மாறுதலாக மாறுதல் பெற்றுள்ள சாமி.சத்தியமூர்த்தி ஆகிய இருவரையும் பல்வேறு ஆசிரியர் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள்,தலைமையாசிரியர்கள் சந்தித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments