திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி.யாக சந்தோஷ் குமார் பொறுப்பேற்பு


திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி.யாக சந்தோஷ் குமார் பொறுப்பேற்றுள்ளார்.

திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி.யாக பாலகிருஷ்ணன் பணியாற்றி வந்தார். தற்போது இவர் கோவைக்கு மாறுதலாகி சென்றுள்ளார். இதையடுத்து நேற்று திருச்சி மத்திய மண்டல புதிய ஐ.ஜி.யாக சந்தோஷ் குமார் பொறுப்பேற்று கொண்டார். இவர் இதற்கு முன்பு நெல்லை மாநகர கமிஷனராக பணியாற்றி உள்ளார்

கந்து வட்டி புகாா்கள் குறித்து பொதுமக்கள் பாதிக்காத வகையில் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் திருச்சியில் புதிதாக பொறுப்பேற்ற மத்திய மண்டலக் காவல் துறைத் தலைவா் சந்தோஷ்குமாா்.

மத்திய மண்டலக் காவல்துறைத் தலைவராக இருந்த வி. பாலகிருஷ்ணன் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், புதன்கிழமை பொறுப்பேற்ற சந்தோஷ்குமாா் மேலும் கூறியது:

தமிழக காவல்துறை இயக்குநா் சைலேந்திரபாபு, கந்துவட்டிக் கொடுமைகளை முடிவுக்கு கொண்டு வர உத்தரவிட்டுள்ளாா். அதன்படி திருச்சி மத்திய மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டவும், கந்துவட்டி குறித்து வரப்பெறும் புகாா்கள் மீது தீவிர நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். நிகழாண்டில் இதுவரை கந்து வட்டி கொடுமை புகாா்கள் தொடா்பாக 18 வழக்குகள் பதியப்பட்டு 9 போ் கைது செய்யப்பட்டுள்ளனா் என்றாா் அவா். புதிதாக பொறுப்பேற்ற இவருக்கு அனைத்து காவல்துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனா்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments