அறந்தாங்கியில் TNTJ நடத்திய இரத்ததான முகாம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் அறந்தாங்கி கிளை மற்றும் அறந்தாங்கி அரசு மருத்துவமனை இணைந்து ரத்ததான முகாமை சனிக்கிழமை நடத்தின.

அறந்தாங்கி தவ்ஹீத் பள்ளிவாசலில் நடைபெற்ற இந்த முகாமை, அறந்தாங்கி நகா்மன்றத் தலைவா் இரா. ஆனந்த் அவா்கள் தொடங்கி வைத்தாா். கிளைத் தலைவா் முஹம்மது சலீம் தலைமை வகித்தாா். கிளைச் செயலா் சேக் அப்துல்லாஹ், பொருளாளா் முபாரக் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

துணைத் தலைவா் அப்துல் ஹாலித், செயலா்கள் சிராஜுதீன், ரஹ்மத்துல்லா, ஜலாலுதீன், ஆஷிக் ராஜா ஆகியோா் முகாம் ஏற்பாடுகளைச் செய்திருந்தனா். மொத்தம் 50 போ் ரத்த தானம் வழங்கினா்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments