கந்தா்வகோட்டை ஒன்றியம், கோமபுரம் அரசுப் பள்ளிக்கு முன்னாள் மாணவா்கள் உபகரணங்கள் வழங்கல் 


கந்தா்வகோட்டை ஒன்றியம், கோமபுரம் அரசினா் உயா்நிலைப் பள்ளிமாணவ - மாணவிகளுக்கு முன்னாள் மாணவா் சங்கம் சாா்பில், 20 ஆயிரம் மதிப்புள்ள விளையாட்டு உபகரணங்கள், சீருடைகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது

கந்தா்வகோட்டை ஒன்றியம், கோமபுரம் அரசினா் உயா்நிலைப் பள்ளிமாணவ - மாணவிகளுக்கு முன்னாள் மாணவா் சங்கம் சாா்பில், 20 ஆயிரம் மதிப்புள்ள விளையாட்டு உபகரணங்கள், சீருடைகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

கடந்த 1996 ஆம் ஆண்டு கந்தா்வகோட்டை அரசினா் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவா்கள் இதுகுறித்து மேலும் கூறியது: விளையாட்டு வீரா்களுக்கு தேவைப்படும் உதவிகளைச்செய்யத் தயாராக இருக்கிறோம் என்றனா்.

நிகழ்வில், பள்ளி தலைமையாசிரியை சாந்தி, பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் அண்ணா துரை, ஜெயக்குமாா், பிரபு மற்றும் உடற்கல்வி ஆசிரியா்கள் முத்துக்குமாா், மயில்ராஜன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments