ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு நாள் கொண்டாட்டம்.
ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு நாள் கொண்டாடபட்டது.

தமிழக பள்ளிக் கல்வி த்துறை சார்பில் ஜூலை 18-ஆம் நாளான நேற்று தமிழ்நாடு நாள் கொண்டாடப்படவேண்டும் என்றும் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்பபடுத்த வேண்டும் எனவும் பேரறிஞர் அண்ணா அவர்களின் புகைப்படத்துடன் சுவரொட்டிகள் தயார் செய்யப்பட்டு பள்ளிகளுக்கு அனுப்பபட்டது.

அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் வழிபாட்டுக் கூட்டத்தில் தமிழ்நாடு உருவான விதம் பற்றியும் பேரறிஞர் அண்ணா அவர்களால் 1967 ஜுலை 18 நாள் அன்று கொண்டு வரப்பட்ட தீர்மானம் பற்றியும் எடுத்துக்கூறி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்ட சுவரொட்டியை (பிளக்ஸில்) சட்டைபோல் தயார் செய்து  அணிவித்துக் கொண்டு வழிப்பாட்டு கூட்டத்தை நடத்தியவிதம் மாணவர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. உடன் நாட்டு நலப்பணித்திட்ட  அலுவலர் குமார், மாணவன் ஒருவரும் இதை அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments