கோட்டைப்பட்டிணம் அருகே புதுக்குடியில் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மாட்டு வண்டி எல்கை பந்தயம் பாய்மரப்படகு போட்டி

வடக்கு புதுக்குடி மகாகாளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம், பாய்மரப்படகு போட்டி ஆகியவை நடைபெற்றன.

மாட்டு வண்டி பந்தயம்

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் அருகே வடக்கு புதுக்குடி கிராமத்தில் மகாகாளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் மற்றும் பாய்மரப்படகு போட்டி நடைபெற்றது. காலையில் பெரிய மாடு, சிறியமாடு ஆகிய பிரிவுகளில் மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. பந்தயம் புதுக்குடியில் இருந்து புறப்பட்டு கிழக்குக் கடற்கரை சாலை வழியாக சென்று எல்லையை வந்தடைந்தது. இந்த பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கு பரிசு தொகை வழங்கப்பட்டது. பந்தயத்தை காண சாலையின் இருபக்கமும் பொதுமக்கள் கூடி இருந்தனர்.

பாய்மரப்படகு போட்டி

இதன் தொடர்ச்சியாக கடலில் பாய்மரப்படகு போட்டியும் நடைபெற்றது. இப்போட்டியில் பல மாவட்டங்களை சேர்ந்த சுமார் 20-க்கும் மேற்பட்ட படகுகள் கலந்து கொண்டன. வெற்றி பெற்ற படகு உரிமையாளர்களுக்கு சுழற்கோப்பையும், பரிசு தொகையும் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments