கீழை சவுதி அமைப்பு சார்பாக கீழக்கரை ஹாஜிகள் சந்திப்பு நிகழ்ச்சி - ஊர் நலன் & வளர்ச்சி குறித்து கலந்துரையாடல்

புனித மக்கா மாநகரில் கீழை சவுதி அமைப்பு சார்பாக கீழக்கரை ஹாஜிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஜூலை 22 வெள்ளிக்கிழமை இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இருந்து வருகை தந்த ஹாஜிகள் மற்றும் கீழை சவுதி அமைப்பு நிர்வாகிகள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில்  கீழக்கரை பண்டைய வரலாறு மற்றும் கீழக்கரை மக்கள் வளர்ச்சிக்கு திட்டமிடுதல்  மற்றும் கீழக்கரை பெண்களுக்கு  சொந்தமாக தொழில் செய்வதற்கு வாய்ப்புகள் ஏற்பாடு செய்வது மற்றும் கீழக்கரை நலன் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது

கீழை. சவுதி அமைப்பு சார்பாக ஹாஜிகளுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
நன்றி : கீழக்கரை டைம்ஸ்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments