பள்ளிகளில் முக கவசம் கட்டாயம் : பள்ளிக்கல்வித்துறை
    பள்ளிகளில் மாணவர்கள் முக கவசம் கட்டாயம் அணியவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து அவை வெளியிட்டு உள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனையடுத்து பள்ளி வளாகத்தில் மாணவர்கள் முக கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும்

மேலும் பள்ளி வளாகத்தில் வெப்ப பரிசோதனை கருவிமூலம் பரிசோதனை நடத்தி பின்னரே உள்ளே அனுமதிக்க வேண்டும். வகுப்பறைகளில் உரிய காற்றோட்டம் வசதி இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். பள்ளிகளில் யாருக்கேனும் உடல் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டால் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments