புதுக்கோட்டை மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரைப்போட்டி 9-ந் தேதி நடக்கிறது    
        ‘‘தமிழ்நாடு நாள் விழா” கொண்டாடுவதையொட்டி தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் புதுக்கோட்டை மாவட்ட அளவில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் வருகிற 9-ந் தேதி ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. ஒவ்வொரு போட்டிக்கும் தனித்தனியே முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.7 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது. முதலில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரால் கீழ்நிலை அளவில் கட்டுரை, பேச்சுப்போட்டிக்கு தனித்தனியே 25 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். முதன்மைக் கல்வி அலுவலரால் பரிந்துரைக்கப்படும் பட்டியலில் இடம் பெறும் மாணவர்கள் மட்டுமே மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க முடியும். மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க பரிந்துரைக்கப்பெறும் மாணவர்கள் உரிய படிவத்தை நிறைவு செய்து அந்தந்த பள்ளித் தலைமையாசிரியர்களிடம் ஒப்பம் பெற்று போட்டி நடக்கும் நாளன்று அளித்து பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் கவிதாராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments