டி.வி., ஏ.சி. சுவிட்சுகளை முழுமையாக அணைக்காமல் பயன்படுத்தாத மின்சாரத்துக்கு கட்டணம் செலுத்தும் நுகர்வோர் ஆய்வில் அதிர்ச்சி தகவல்
டி.வி., ஏ.சி.களின் 'சுவிட்சு'களை முழுமை யாக அணைக்காமல் பயன்படுத்தாத மின் சாரத்துக்கும் நுகர்வோர் பலர் கட்டணம் செலுத்தி வருவதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.
ஆய்வு
பெரும்பாலான வீடுகளில் பொதுவாக காணப்படும் டி.வி., 'செட்டாப் பாக்ஸ்', ஏ.சி. மற்றும் 'ஹோம் தியேட்டர்' உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களின் மின்சார பயன்பாடு தொடர்பாக 'சிட்டிசன் கன்சியூமர் அண்ட் சிவிக் ஆக்சன் குரூப்' என்ற நுகர்வோர் அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தியது. 7 மாவட்டங் களில் இதற்கான ஆய்வுகள் நடத்தப்பட்டன.
இந்த ஆய்வில், சுமார் 70 சத வீதம் பேர் தங்களுடைய வீட்டு உபயோக பொருட்களை முழுமையாக 'ஆப்' செய்யாமல் (அணைக் காமல்), மின்சார இணைப்பு அந்த பொருட்களுக்கு தொடர்ச்சியாக வரும் வகையில் பயன்படுத்தியது தெரியவந்தது. இதனால் பயன்படுத்தாத மின்சாரத்துக்கும் சேர்த்து அவர்கள் கட்டணம் செலுத்தியதும் தெரியவந்திருக்கிறது.
மின்சார பயன்பாடு எலக்ட்ரிக் பொருட்களின் பிரதான 'சுவிட்’சை 'ஆப்' செய்யவில்லை என்றால் அது மின்சாரத்தை தொடர்ந்து நுகர்ந்துகொண்டே இருக்கும். டி.வி.. ஏ.சி. 'ஹோம் தியேட்டர்' ஆகியவற்றை 'ரிமோட்' மூலம் மட்டும் 'ஆப்' செய்துவிட்டு, அதன் பிரதான 'சுவிட்'சை 'ஆப்' செய்யாமல் விட்டாலோ, செல் போன்களின் ‘சார்ஜர்'களை 'சுவிட்ச்' 'ஆப்' செய் யாமல் 'பிளக்குகளில் சொருகி வைத்திருந்தாலோ மின்சார பயன்பாடு இருந்துகொண்டே இருக்கும். இதில் டி.வி. மற்றும் 'ஹோம் தியேட்டர்' ஆகிய வற்றை முழுமையாக 'ஆப்' செய்யாமல், 'ரிமோட்’ மூலம் அணைத்து வைத்தாலே அதிக மின்சா ரத்தை உறிஞ்சி, மின்சார கட்டணத்தை எகிற வைத்துவிடும். இதுபோன்ற நடவடிக்கைகளால் ஆண்டுக்கு சுமார் ரூ.1,000 அளவுக்கு மின்சார கட்டணமாக செலுத்தவேண்டியது வரும். தோரா யமாக இது 174 யூனிட்' அளவுக்கு மின்சார
இழப்பை ஏற்படுத்தும். 174 'யூனிட்'மின்சார பயன் பாட்டின் மூலம் 10 வாட் கொண்ட இரண்டு எல்.இ.டி. பல்புகளை ஒரு ஆண்டு முழுவதும் தடையில்லாமல் எரியவிடமுடியும். அல்லது 15 நட்சத்திர ரேட்டிங்' கொண்ட 1.5 டன் ஏ.சி.யை 116 மணி நேரம் இயக்கமுடியும்.
விழிப்புணர்வு
இதுகுறித்து 'சிட்டிசன் கன்சியூமர் அண்ட் சிவிக் ஆக்சன் குரூப்' மூத்த ஆராய்ச்சியாளர் கே.விஷ்ணுராவ் கூறுகையில், மின்சாரத்தை திறம்பட உபயோகிக்க தவறுவதால் கடுமையான மின்சார இழப்பு ஏற்படுகிறது. ஒரு யூனிட் மின்சாரத்துக்கு ரூ.10 வசூலித்தால், வீட்டு உபயோக பொருட்களை சரிவர பயன்படுத்தாமல் ஏற்படும் மின்சார இழப்பின் தாக்கம் தெரியும். மின்சாரத் துக்கு நாம் செலவிடும் தொகை குறைவு என்ப தால் எளிதாக எடுத்துக்கொண்டு, டி.வி. மற்றும் ஏ.சி.களின் 'ஸ்டெபிலைசர்'களை முழுமையாக அணைக்காமல் அப்படியே விட்டுவிடுகிறோம்" என்றார்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அதிகாரிகள் கூறும்போது, "செல்போன் ‘சார்ஜர்’களை முழுமையாக 'ஆப்' செய்யவில்லை என்றால் அது டிரான்ஸ்பார்மருக்கு கூடுதல் சுமையை கொடுக்கும். 'ஆன்' செய்து வைக்கப் பட்ட ஏ.சி.யின்'ஸ்டெபிலைசர்' கூட மின்சாரத்தை உறிஞ்சும். எனவே வீட்டு உபயோக பொருட்களை ரிமோட்' மூலம் மட்டும் 'ஆப்' செய்தால் போதாது, பிரதான ‘சுவிட்சை’யும் 'ஆப்' செய்யவேண்டும். தற்போதைய ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கப் பட்டு, மின்சார சிக்கன பயன்பாட்டுக்கு பரிந்து ரைக்கப்பட்ட அம்சங்கள் தொடர்பாக பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்" என்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.