இங்க பாருங்க.. தமிழர்களுக்கு வேலை வழங்க கூடாதாம்.. கோபியில், வடமாநில தொழிலாளர்கள் பெரும் போராட்டம்!





ஈரோடு: கோபிசெட்டிபாளையத்தில் தனியார் நூற்பாலையில் உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்கியதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி வடமாநில மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தமிழர்களுக்கு வேலை வழங்க கூடாதாம்.. கோபியில், வடமாநில தொழிலாளர்கள் பெரும் போராட்டம்!

அண்மையில் தென்னிந்தியாவைச் சேர்ந்த மக்கள், வட இந்தியாவுக்கு செல்வது கடந்த 10 ஆண்டுகளில் கணிசமாக குறைந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதேநேரத்தில் வட இந்தியர்கள், தென்னிந்திய மாநிலங்களில் குடியேறுவது கிடுகிடுவென அதிகரித்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

உதாரணமாக 2001ம் ஆண்டு தென்னிந்தியாவில் வட இந்தியர்களின் எண்ணிக்கை சுமார் 58.2 லட்சமாக இருந்தது. ஆனால் 2011ம் ஆண்டு தென்னிந்தியாவில் வசித்த வட இந்தியர்கள் எண்ணிக்கை 77.5 லட்சமாக உள்ளது. இப்போது இந்த எண்ணிக்கை பல கோடிகளைத் தாண்டும் என்று கூறப்படுகிறது. தேனி, ராமேஸ்வரம், தென்காசி, திருநெல்வேலி என தமிழ்நாட்டின் கிராமப் பகுதிகளில் கூட வட இந்தியர்கள் நடமாட்டத்தை பார்க்க முடியும். குறிப்பால ஈரோடு மாவட்ட பேருந்து நிலையத்தில் இந்தி மொழியை பயன்படுத்த வேண்டிய நிலை அதிகம் இருக்கும்.






இந்தநிலையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே தனியார் நூற்பாலையில், உள்ளூர் மக்களுக்கு பணி வழங்கியதை எதிர்த்து வடமாநிலத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளாளபாளையம் பகுதியில் தனியார் நூற்பாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. உள்ளூர் தொழிலாளர்களுக்கு பணி வழங்கியதை எதிர்த்து, அங்கு பணிபுரியும் வடமாநிலங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நூற்பாலை நிர்வாகத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டம் ஏன்? 
போராட்டம் ஏன்?
இந்த நூற்பாலையில் ஒடிசா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன், இங்கு பணிபுரிந்து வந்த ஒடிசாவை சேர்ந்த தொழிலாளி கசரப் என்பவர் காணாமல் போயுள்ளார். இதுகுறித்து ஆலை நிர்வாகம் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி வடமாநிலத் தொழிலாளர்கள் ஏராளமானோர் கோபி காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதனைத்தொடந்து புகாரின் மீது வழக்குப்பதிவு செய்து காணாமல் போன தொழிலாளி கசரப்பை போலீசார் தேடி வருகின்றனர்.

 உள்ளிருப்பு போராட்டம் 

இதனிடையே நூற்பாலை நிர்வாகம் காணாமல் போன வடமாநில தொழிவாளியை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து அங்கு பணிபுரியும் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


வாழ்வாதாரம் பாதிப்பு 
இதனால் தனியார் நூற்பாலை நிர்வாகம் உள்ளூர் தொழிலாளர்கள் சிலரைக் கொண்டு ஆலையை தொடர்ந்து இயக்கி வருகின்றனர். இதன் காரணமாக பல ஆண்டுகளாக இங்கு பணிபுரியும் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி, வடமாநிலத் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அண்மைக் காலமாக தமிழ்நாடு நிறுவனங்களில் தமிழர்களுக்கு இடஒதுக்கீடு முறை கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கைகள் வலுப்பெற்று வரும் நிலையில், உள்ளூர் மக்களுக்கு எதிராக வடமாநில மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பேசுபொருளாகியுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments