பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி: மாங்குடி அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா




        அன்னவாசல் அருகே உள்ள மாங்குடியில் அரசு உயர் நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 10-ம் வகுப்பு பொதுதேர்வில் தொடர்ந்து 3 ஆண்டுகளாக மாணவர்கள் 100 சதவீத தேர்ச்சி பெற்று வந்துள்ளனர்.
இதையடுத்து, அப்பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்த அப்பகுதி மக்கள் மற்றும் இளைஞர்கள் முடிவு செய்தனர். இதனைதொடர்ந்து பாராட்டு விழா மாங்குடி அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் அப்துல்கலாம் கலையரங்கத்தில் நடந்தது. விழாவில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து 100 சதவீத தேர்ச்சி பெற காரணமாக இருந்த பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கினர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments