மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணிபுரிந்தவர்களுக்கு தங்கப்பதக்கம் விண்ணப்பிக்க 10-ந் தேதி கடைசி நாள்

        மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு 10 கிராம் எடையுள்ள தங்க பதக்கம், ரூ.25 ஆயிரம் ரொக்கபரிசுடன் கூடிய சான்றிதழ், சிறந்த தொண்டு நிறுவனத்திற்கு 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம், ரூ.50 ஆயிரம் ரொக்கப்பரிசுடன் கூடிய பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட உள்ளன. இதேபோல் மாற்றுத்திறனாளிகள் நலனிற்காக பணியாற்றிய சிறந்த டாக்டருக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம், ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசுடன் கூடிய பாராட்டு சான்றிதழ் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மிக அதிகளவில் வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனத்திற்கு 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம், ரூ.10 ஆயிரம் பரிசுடன் கூடிய பாராட்டு சான்றிதழ் மற்றும் சிறந்த சமூகப்பணியாளருக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசுடன் கூடிய பாராட்டு சான்றிதழ் ஆகிய விருதுகள் வருகிற ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி சுதந்திர தின விழா அன்று முதல்-அமைச்சரால் வழங்கப்பட உள்ளன. எனவே தகுதியானவர்கள் விருதுகளுக்கான விண்ணப்ப படிவங்களை புதுக்கோட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடமிருந்து பெற்று, பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ்களுடன் வருகிற 10-ந் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments