கல்லூரி கனவு திட்டத்தை அனைத்து கல்வி மாவட்டங்களிலும் நடத்த வேண்டும் - திசைகள் அமைப்பின் தலைவர் மருத்துவர் தெட்சணாமூர்த்தி வேண்டுகோள்!!



    
    கல்லூரி கனவு திட்டத்தை அனைத்து கல்வி மாவட்டங்களிலும் ஆண்டுதோறும் 9 முதல் 12ம் வகுப்பு வரை அனைத்துவாகை மாணவர்களுக்கும் நடத்த வேண்டும் என திசைகள் அமைப்பின் தலைவர்  மருத்துவர் தெட்சணாமூர்த்தி  வேண்டுகோள் விடுத்துள்ளார். 

அறந்தாங்கி,ஜூலை.3:புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி இந்திய மருத்துவ கழக அரங்கத்தில் நடைபெற்ற அடுத்து என்ன படிக்கலாம் என்ற வழிகாட்டு நிகழ்ச்சியில் தமிழக அரசின் சார்பில் நடத்தப்படும் கல்லூரி கனவு திட்டத்தை தமிழகத்தின் அனைத்து கல்வி மாவட்டத்திலும் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து வகை மாணவர்களுக்கும் நடத்தப்பட வேண்டும் என திசைகள் அமைப்பின் தலைவர் மருத்துவர் தட்சிணாமூர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

அறந்தாங்கி இந்திய மருத்துவக் கழக அரங்கத்தில் நடைபெற்ற அடுத்து என்ன படிக்கலாம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி இந்திய மருத்துவக் கழக அறந்தாங்கி கிளை தலைவர் மருத்துவர் லட்சுமி நாராயணன் தலைமையில் திசைகள் பொருளாளர் முகமது முபாரக் துணைச் செயலாளர் ஆண்டோ பிரவீன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

அறந்தாங்கி தி போர்ட் சிட்டி ரோட்டரி சங்க தலைவர் முஜிபுர் ரஹ்மான் அனைவரையும் வரவேற்றார். திசைகள் அமைப்பு தலைவர் மருத்துவர் தெட்சிணாமூர்த்தி துவக்க உரையாற்றினார். இறுதியில்  ஒருங்கிணைப்பாளர் சேது புகழேந்தி அனைவருக்கும் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் துணை மருத்துவ படிப்புகள் குறித்து அரசு மருத்துவர் அசாருதீன், பொறியியல் கல்வி குறித்து பொறியாளர் அக்ஷயா, கலை மற்றும் அறிவியல் கல்வி குறித்து பேராசிரியர் விஸ்வநாதன், சட்ட கல்வி வழிமுறைகள் பற்றி வழக்கறிஞர் லோகநாதன், பிசியோதெரபி இயற்கை மற்றும் உடல் மருத்துவ கல்வி குறித்து மருத்துவர் காமராஜ், மொழிக்கல்வி குறித்து பேராவூரணி கல்லூரி பேராசிரியர் முனைவர் சண்முகப்பிரியா, தெழிற்கல்வி குறித்து கேம்பிரிட்ஜ் கேட்டரிங் கல்லூரி நிறுவனர் அப்துல் பாரி, பொது வேலை வாய்ப்புகள் குறித்து பொறியாளர்  கஃபார்கான், ஆசிரியர் கல்வி பணி குறித்து கீதாஞ்சலி மஞ்சன் ஆகியோர்  மாணவ மாணவியர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டு உரையாற்றி  மேற்படிப்பு குறித்த கேள்விகளுக்கும் பதில் அளித்தார்கள், 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments