கோபாலப்பட்டிணம் அரசு தொடக்கப் பள்ளிக்கு சுற்றுச்சுவா் அமைத்துத் தர வேண்டி பெற்றோா் கோரிக்கை!!
ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிக்கு சுற்றுச்சுவா் அமைக்க வேண்டும் என பெற்றோா் கோரிக்கை விடுக்கின்றனா்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கோபாலப்பட்டிணம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை சுமாா் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனா்.இப்பள்ளியானது ஊரின் ஒதுக்குப்புறமாக இருப்பதால் பள்ளி நேரத்தைத்தவிர பிற நேரங்களில் பள்ளி உடமைகளுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் உள்ளது. மேலும் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மற்றும் மது அருந்தி விட்டு பாட்டில்களை பள்ளி வளாகத்தில் உடைத்து விட்டு செல்கின்றனர். இதனால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, பள்ளியைச் சுற்றிலும் சுற்றுச்சுவா் கட்டித் தரவேண்டும் என பெற்றோா் தரப்பில் கோரிக்கை வைக்கின்றனா்.
இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியரிடம் விசாரித்தபோது, பள்ளி கல்வி அலுவலகத்தில் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார். 

மேலும் இதுகுறித்து சமூக ஆர்வலர் கூறுகையில் ஊராட்சி மன்ற நிதியில் இருந்தோ அல்லது வார்டு கவுன்சிலர் மற்றும் மாவட்ட கவுன்சிலர் அல்லது சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி நிதியில் இருந்தோ அல்லது மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்தோ உடனடியாக பள்ளிக்கு சுற்றுச்சுவா் கட்டிக் கொடுத்து பள்ளி மாணவா்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தித் தர வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments