திருச்சி-காரைக்குடி, கோவை-சேலம் இடையே எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகள் மீண்டும் இயக்கம் தெற்கு ரெயில்வே அறிவிப்பு




    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- கீழ்க்கண்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மீண்டும் இயக்கம். * ஈரோடு-ஜோலார்பேட்டை (வண்டி எண்:06616) இடையே மாலை 4.10 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லாத சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 13-ந்தேதி முதல் மீண்டும் இயக்கப்படுகிறது. மறுமார்க்கமாக ஜோலார்பேட்டை-ஈரோடு (06615) இடையே காலை 5.30 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லாத சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 14-ந்தேதி முதல் மீண்டும் இயக்கப்படுகிறது.
* ஈரோடு-மேட்டூர்டேம் (06407) இடையே காலை 5 மணிக்கும், மேட்டூர்டேம்-ஈரோடு (06408) இடையே இரவு 7.25 மணிக்கும் புறப்படும் முன்பதிவில்லாத தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வருகிற 11-ந்தேதி முதல் மீண்டும் இயக்கப்படுகிறது. * திருச்சி-காரைக்குடி (06887) இடையே மாலை 4 மணிக்கு வாரத்தில் ஞாயிற்றுக்கிழமையை தவிர்த்து அனைத்து நாட்களும் இயக்கப்படும் முன்பதிவில்லாத சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 10-ந்தேதியில் இருந்தும், காரைக்குடி-திருச்சி (06888) இடையே காலை 9.40 மணி, கோவை-சேலம் (06802) இடையே காலை 9 மணி, சேலம்-கோவை (06803) இடையே மதியம் 1.40 மணி, சோரனூர்-கோவை (06804) இடையே மதியம் 3.10 மணி, கோவை-சோரனூர் (06805) இடையே காலை 11.20 மணிக்கும் வாரத்தில் ஞாயிற்றுக்கிழமையை தவிர்த்து அனைத்து நாட்களும் இயக்கப்படும் முன்பதிவில்லாத சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வருகிற 11-ந்தேதியில் இருந்தும் மீண்டும் இயக்கப்படுகிறது. * சேலம்-கரூர் (06831) இடையே காலை 5.20 மணிக்கும், கரூர்-சேலம் (06838) இடையே இரவு 7.55 மணிக்கும் வாரத்தில் சனிக்கிழமையை தவிர்த்து அனைத்து நாட்களும் இயக்கப்படும் முன்பதிவில்லாத சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வருகிற 11-ந்தேதி முதல் மீண்டும் இயக்கப்படுகிறது. * சோரனூர்-கோவை (06458) இடையே காலை 8.20 மணி, கோவை-சோரனூர் (06459) இடையே மாலை 4.30 மணிக்கும் புறப்படும் முன்பதிவில்லாத தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வருகிற 16-ந்தேதி முதல் மீண்டும் இயக்கப்படுகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments