மணமேல்குடி தொடக்கப்பள்ளியில் மாணவர்களின் சீருடைகள், புத்தகங்கள் தீயில் எரிந்து நாசம்மணமேல்குடி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வைக்கப்பட்டிருந்த மாணவர்களின் சீருடைகள், புத்தகங்கள் தீயில் எரிந்து நாசமானது.

மணமேல்குடி அய்யனார் கோவில் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் உள்ள ஒரு அறையில் மாணவர்களுக்கு தேவையான புத்தகம் மற்றும் பள்ளி சீருடைகள் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று சீருடை வைக்கப்பட்ட அறையில் தீப்பிடித்து எரிந்தது. மேலும், பள்ளி அறையில் இருந்து புகை வந்ததால் உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இதுகுறித்து ஜெகதாப்பட்டினம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில், தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் அந்த அறையில் வைக்கப்பட்டிருந்த சீருடைகள், புத்தகங்கள் அனைத்தும் எரிந்து நாசமாகி போனது. இதுகுறித்து மணமேல்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பள்ளிக்கு விடுமுறை என்பதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments