புதுக்கோட்டை வழியாக திருச்சி-காரைக்குடி ‘டெமு’ ரெயில் சேவை மீண்டும் தொடங்கியது.
புதுக்கோட்டை வழியாக திருச்சி-காரைக்குடி ‘டெமு’ ரெயில் சேவை மீண்டும் தொடங்கியது.

டெமு ரெயில்

புதுக்கோட்டை வழியாக திருச்சி-காரைக்குடி ‘டெமு’ ரெயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரெயிலானது காரைக்குடியில் இருந்து விருதுநகருக்கு இணைப்பு ரெயிலாகவும் இயக்கப்பட்டது. அதனால் இதே ரெயிலில் திருச்சி-விருதுநகர் வரை பயணிகள் பயணிக்க முடியும். கொரோனா ஊரடங்கின் போது இந்த ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. கொரோனா பரவல் குறைந்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின் விருதுநகர்-காரைக்குடி வரையிலான ‘டெமு’ ரெயில் சேவை மட்டும் தொடங்கப்பட்டது.

காரைக்குடி-திருச்சி- காரைக்குடி இடையே ‘டெமு’ ரெயில் சேவை தொடங்கப்படவில்லை. இதனால் இந்த ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

மீண்டும் தொடங்கியது

இதைத்தொடர்ந்து திருச்சி-காரைக்குடி ‘டெமு’ ரெயில் சேவை நேற்று முதல் மீண்டும் தொடங்கியது. திருச்சியில் இருந்து நேற்று மாலை 4.10 மணிக்கு புறப்பட்டு புதுக்கோட்டைக்கு மாலை 5 மணி அளவில் வந்தடைந்தது. அதன்பின் மாலை 5.02 மணிக்கு காரைக்குடி புறப்பட்டு சென்றது. இந்த ரெயிலானது திருச்சி-காரைக்குடி இடையே சனிக்கிழமை தவிர மற்ற நாட்களில் இயக்கப்படும்.

காரைக்குடி-திருச்சி இடையே ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்கள் இயக்கப்படும். காரைக்குடியில் இருந்து காலை 9.40 மணிக்கு புறப்பட்டு புதுக்கோட்டைக்கு காலை 10.20 மணிக்கு வந்து காலை 10.22 மணிக்கு புறப்படும். திருச்சிக்கு காலை 11.35 மணிக்கு சென்றடையும்.திருச்சி-காரைக்குடி ‘டெமு’ ரெயில் சேவை தொடங்கிய நிலையில் விருதுநகர் வரை இந்த ரெயிலில் பயணிகள் பயணிக்க முடியும்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments