டிராக்டர் மூலம் மணல் எடுக்க கோரி கலெக்டரிடம் மனு
டிராக்டர் மூலம் மணல் எடுக்க கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு டாரஸ் மற்றும் டிப்பர் லாரிகள் மூலம் மணல் எடுத்துச் செல்லப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா பானாவயல் பகுதியில் கடந்த 1 மாதகாலமாக அரசு அனுமதியுடன் மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து உள் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு டிப்பர், டாரஸ் லாரிகள் மூலம் மணல் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் உள் மாவட்டங்களுக்கு பயன்படும் வகையில் ட்ராக்டர் மூலம் மணல் அள்ள மாவட்ட கலெக்டர் அனுமதி வழங்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கல்லணைக்கால்வாய் பாசனதாரர் விவசாயிகள் சங்கத் தலைவர் கொக்குமடை ரமேஷ், மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது, பானாவயல் கிராம பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மணல்குவாரியிலிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு டாரஸ் மற்றும் டிப்பர் லாரிகள் மூலம் மணல் எடுத்துச் செல்லப்படுகிறது. இந்நிலையில் உள் மாவட்டத்தில் உள்ள குக்கிராமங்கள், குடியிருப்பு பகுதிகளில் டிப்பர் லாரிகள் செல்ல போதிய பாதை வசதி இல்லை. இதனால் மத்திய, மாநில அரசுகளால் வழங்கப்படுகின்ற வீடுகள் மற்றும் சின்னச் சின்ன கட்டுமானப் பணிகள் நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே உள் மாவட்டத்தில் லாரிகள் செல்ல முடியாத குக்கிராமங்களுக்குள் செல்ல ஏதுவாக உள்ள ட்ராக்டரில் மணல் எடுக்க மாவட்ட கலெக்டர் அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments