தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தின் ஐந்தாண்டு சட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் தேதிகள் அறிவிப்பு
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தின் ஐந்தாண்டு சட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்ற அனைத்து அரசு சட்டக்கல்லூரிகளிலும் மற்றும் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தின் சீர்மிகு சட்டப்பள்ளியிலும் பயிற்றுவிக்கப்படும். ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்புகளுக்கு 12.07.2022 முதல் 29.07.2022 வரை பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வ இணையதளம் (Online) www.tndalu.ac.in வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்றும் இந்நிகழ்வினை மாண்புமிகு சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத் துறை அமைச்சர் மற்றும் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் இணைவேந்தர் திரு. எஸ். ரகுபதி அவர்கள் 12.07.2022 அன்று காலை 10.30 மணிக்கு துவக்கி வைக்கிறார் என்றும் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார்.

மூன்றாண்டு சட்டப்படிப்பு மற்றும் முதுகலை சட்ட மேற்படிப்புகளுக்கான சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் தேதிகள் பல்கலைக்கழக இணையதளத்தில் பின்னர் என்றும்  அறிவிக்கப்படும் என்று செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments