கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம்!
கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் வரவேற்புரை மற்றும் கூட்டத்திற்கான நோக்கவுரையை பள்ளி தலைமையாசிரியர் விஜயகுமார் ஆற்றினார்.

கலந்து கொண்ட பெற்றோர்கள் சார்பில் 10 பெண் மாணவிகள் பிரதிநிதியும், 5 ஆண் மாணவர்கள் பிரதிநிதியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் தலைவராக மும்தாஜ் முபாரக், துணைத் தலைவராக I.ரகுமா அம்மாள் மற்றும் சுயநிதி குழு உறுப்பினராக S.அரபாத் நிஷா தேர்ந்தெடுக்கப்பட்டனர். குழு உறுப்பினர்களாக ஆசிரியர்கள் சார்பில் வே.விஜயகுமார் தலைமையாசிரியர் (உறுப்பினர் மற்றும் கூட்ட அழைப்பாளர்), S.விஜயராணி ஆகிய இருவரும், பள்ளியில் பயிலும் மாணவர்களின் பிரதிநியாக U.யூசுப், E.நல்ல முகமது, A.முகமது யூசுப், B.மைதீன் பாத்திமா, M.முத்து லெட்சுமி, R.சிராஜி நிஷா, R.சுஜிதா, A.யோகநாதன், R.சித்தி மதினா, M.ரஜியா பானு, M.பாத்திமா ரிகானா, V.கருப்பசாமி ஆகியோரும், உள்ளாட்சி பிரதிநியாக A.சாதிக் பாட்சா, R.ரஜபு நிஷா ஆகியோரும், புரவலராக OSM.முகம்மது அலி ஜின்னா தேர்ந்தெடுக்கப்பட்டனர். அனைவருக்கும் உறுப்பினருக்கான சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

இக்கூட்டத்தில் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஊர் ஜமாத்தார்கள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments